எனது அன்பான தீட்சை பெற்ற, அடைக்கலம் பெற்ற, தீட்சை பெற ஆர்வமுள்ள, சிக்ஷா சீடர்கள், பேர சீடர்கள் மற்றும் நலம் விரும்புபவர்களே,

எனது ஆசீர்வாதங்களையும், வாழ்த்துக்களையும், நமஸ்காரங்களையும் பொருத்தமானபடி ஏற்றுக்கொள்ளுங்கள்.
எல்லா புகழும் ஸ்ரீல பிரபுபாதருக்கே!

வசிப்பிடம்: ஸ்ரீ மாயாபூர் சந்திரோதய ஆலயம்.
முகாம்: இஸ்கான் சென்னை

தேதி: 4 டிசம்பர் 2025

சிறப்பம்சங்கள்

நான் நவம்பர் 24 ஆம் தேதி இரவு சிம்மதேசத்திலிருந்து சென்னைக்குத் திரும்பினேன், அன்றிலிருந்து இங்கேயே இருக்கிறேன். நான் ஒரு சிறுநீரக மருத்துவரை அணுகி எனது வழக்கமான டயாலிசிஸைத் தொடர்ந்தேன்.

கூட்டங்கள் மற்றும் பிற சேவைகளைத் தவிர, ரங்க கிருஷ்ண தாஸ் நிர்வகிக்கும் விரிவாக்க மையம், முரளி ஷ்யாம தாஸ் நிர்வகிக்கும் பிரசார மையத்தையும் பார்வையிட்டு அங்கு வகுப்புகள் கொடுத்தேன். சென்னையில் பிரச்சாரம் விரிவடைவதைக் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

ஸ்ரீல பிரபுபாதரின் அருளுரை

ஸ்ரீல பிரபுபாதர், ஒருவர் மாணவராக வருகிறார். பின்னர் அவர் ஒரு ஆச்சாரி ராக வேண்டும் என்று குறிப்பிடுகிறார்.
ஒவ்வொரு மாணவரும் ஆச்சாரியராக வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறார்கள். ஆச்சாரியர் என்றால் வேதத்தின் சாரத்தை அறிந்து, அவற்றை வாழ்க்கையில் நடைமுறையில் பின்பற்றி, தனது சீடர்களுக்குக் கற்பிப்பவர். ஸ்ரீல பிரபுபாதர் துஸ்ட கிருஷ்ணருக்கு எழுதிய கடிதம், 2 டிசம்பர் 1975, புது தில்லி
“பகவத் கீதையின் அறிவியலை அவர்களுக்குக் கற்றுக் கொடுத்து, கிருஷ்ணரின் முதல் தர பிரதிநிதிகளாக அவர்களைப் பயிற்றுவிக்கவும். இது மிகவும் கடினம் அல்ல, கிருஷ்ணரிடமிருந்து சீடப் பரம்பரையில் வந்த பரிபூரண அதிகாரியிடமிருந்து ஒருவர் கேட்க வேண்டும், பின்னர் எந்த மாற்றமும் இல்லாமல் அதே செய்தியை மீண்டும் சொல்ல வேண்டும். இதைச் செய்தால், அவர் குருவாகும் தகுதியைப் பெறுகிறார்.” ஸ்ரீல பிரபுபாதர் ஜெயதர்ம தாசருக்கு எழுதிய கடிதம், ஆகஸ்ட் 20, 1976, ஹைதராபாத்

எனது செய்தி

எனது அனைத்து சீடர்களும் ஸ்ரீல பிரபுபாதரின் புத்தகங்களை முறையாகப் படித்து எதிர்காலத்தில் ஆச்சாரியார்களாக மாற வேண்டும் என்று நான் விரும்புகிறேன். எனவே இது போல குருவாக மாற வேண்டும். சாஸ்திரங்களை அறிந்து கொள்வது மிகவும் முக்கியம். ஆரம்பத்தில் நீங்கள் ஒரு மாணவராக இருக்கலாம், ஆனால் நீங்கள் என்றென்றும் ஒரு மாணவராக இருக்க வேண்டும் என்பதல்ல. சிறிது காலம் ஒரு மாணவராக இருந்த பிறகு, நீங்கள் ஒரு குருவாக மாற வேண்டும்.

நம்மிடம் மாயாபூர் நிறுவனம் மற்றும் பட்டங்களை வழங்கும் பல நிறுவனங்கள் உள்ளன. மேலும் நீங்கள் ஏதேனும் தலைமைப் பதவியில் இருந்தால், நீங்கள் 40 வயதுக்கு மேற்பட்டவராக இருந்தால், நீங்கள் ஒரு முறை சுருக்கமானத் தேர்வையும் எழுதலாம்.

நான் ஸ்ரீல பிரபுபாதரின் புத்தகங்களை தினமும் படிக்கிறேன். நான் பகவத் கீதையை பல முறை படித்திருக்கிறேன், ஒருவேளை 20 முறைக்கு மேல் படித்திருக்கலாம், ஆனால் நான் அதை மீண்டும் படித்து வருகிறேன், தற்போது நான் 11 ஆம் அத்தியாயத்தில் இருக்கிறேன்.

உத்வேகம் தரும் கதைகள்

கோவிட் இரண்டாவது அலையின் ஊரடங்கின் போது முரளி ஷ்யாம தாஸர் தனது நிகழ்நிலை பிரசாரத்தைத் தொடங்கினார், இப்போது அவர் பக்தர்களின் சமூகத்தையே உருவாக்கியுள்ளார். அவர் தமிழில் பிரசாரம் செய்கிறார். அவருக்கு 700 நேர்மையான தன்னார்வலர்கள் நிகழ்நிலையில் சேவை செய்கின்றனர், சுமார் 4000 தீவிர பக்தர்கள் உள்ளனர், அவர்களில் 1000 க்கும் மேற்பட்டோர் 16 சுற்றுகள் ஜபித்து வருகின்றனர். பின்னர் அவர் அக்டோபர் 2024 இல் ஒரு விரிவாக்க மையத்தைத் தொடங்கி, இப்போது அது சென்னையில் ஒரு பிரசார மையமாக வளர்ந்துள்ளது, நான் சென்றபோது, அங்கு 500 க்கும் மேற்பட்ட பக்தர்கள் இருந்தனர். மேலும், மற்றொரு நாள், நான் அவரது உறுப்பினர்களுக்கு ஒரு நிகழ்நிலை வகுப்பை வழங்கியபோது, சுமார் 1300 பக்தர்கள் நிகழ்நிலையில் இணைந்தனர். உங்கள் நிகழ்நிலை பிரசாரத்தை எவ்வாறு வெற்றிகரமாக்குவது என்பதை நீங்கள் அறிய விரும்பினால், நீங்கள் அவருக்கு muralisyamdas@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எழுதலாம். அவர் தனது தினசரி காலை நிகழ்ச்சியை நிகழ்நிலையில் தொடர்கிறார், மேலும் கடந்த 5 ஆண்டுகளாக சுமார் 1000 பக்தர்கள் தவறாமல் கலந்து கொள்கிறார்கள்.

கடந்த வாரம், எனது சீடர்களில் ஒருவரான டென்மார்க்கைச் சேர்ந்த ரேவதி ரூபேஸ்வரி தேவி தாஸியிடமிருந்து, ஸ்ரீமத் பாகவத ஒலி நாடாக்களைப் பதிவு செய்வதில் அவர் செய்த சேவைகள் குறித்து ஒரு கடிதம் எனக்கு வந்தது. அவர், மற்றொரு பக்தரான யதுநந்தன தாஸருடன் சேர்ந்து, பக்திவேதாந்த புத்தக அறக்கட்டளையின் (BBT) அனுமதியுடன், கோபன்ஹேகனில் உள்ள கிருஷ்ணா ரேடியோவிற்காக டேனிஷ், இத்தாலியன் மற்றும் போர்த்துகீசிய மொழிகளில் ஸ்ரீமத் பாகவதத்தைப் பதிவு செய்து வருகிறார். வெவ்வேறு மொழிகளுக்கான இணைப்புகள் இங்கே தரப்பட்டுள்ளன :

ஆங்கிலம் : https://www.youtube.com/playlist?list=PLqIBxTTD_jfTq7BTzZs5o46VEdr8b3mLd

போர்த்துகீசியம் : Srimad Bhagavatam Primeiro Canto – YouTube
இத்தாலியன் : https://www.youtube.com/watch?v=gnsAjTDpJE8&list=PLqIBxTTD_jfR6a2DPMz5hjW4AGBVTWX4r

இன்று, நாம நிஷ்ட தாசர் என்னை சந்திக்க வந்தார். அவர் எனக்கு மிகவும் ஊக்கமளிக்கும் பிரச்சார அறிக்கையை அளித்தார். கோவிட் ஊரடங்கின் போது வெளியே செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்த சமயத்தில், அவர் நிகழ்நிலை மூலம் தனது பிரச்சாரத்தைத் தொடங்கினார், இப்போது அவர் மங்கலூரில் ஸ்ரீ ஸ்ரீ ராதா கோவிந்தர் கோவிலை முழுமையாக நிறுவியுள்ளார். அவர் கோவிலின் முன்னேற்றம் பற்றிய விரிவான புதுப்பிப்பைக் கொடுத்தார், மேலும் செயல்பாடுகள் எவ்வளவு நன்றாக விரிவடைகின்றன என்பதைக் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். பல நிறுவனங்கள், வளர்ச்சிக்கு ஆதரவளிக்க முன்வருகின்றன. இது கோவில் வசதிகளை மேம்படுத்துவதற்கு மேலும் உதவும்.

அவர்கள் பகவத் கீதை குடியிருப்புக் கல்லூரியை நிறுவுவதற்கு கட்டுமான பணிகளையும் மேற்கொள்கின்றனர், மேலும் அவர்கள் பதினொரு வெவ்வேறு மொழிகளில் பக்தி-சாஸ்திரி மற்றும் பக்தி-வைபவ படிப்புகளை வழங்குகிறார்கள். சைதன்ய மகாபிரபுவின் இயக்கத்தை விரிவுபடுத்துவதற்கு எனக்கு உதவும் என் சீடர்களுக்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.
உங்கள் அனைவருக்கும் ஸ்ரீல பிரபுபாதரின் தொடர் புத்தக விநியோகம் வெற்றியடைய வாழ்த்துகிறேன். உங்கள் பிரச்சார யுக்திகளையும் அறிக்கைகளையும் jayapataka@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.

உங்கள் நலனை என்றும் விரும்பும்,
ஜெயபதாக ஸ்வாமி

செயலி, இணையதளம் மற்றும் சமூக ஊடகங்களுக்கான இணைப்புக்கள்:
ஐஓஸ் செயலி: https://apps.apple.com/us/app/id967072815
அன்டராய்ட் செயலி: https://play.google.com/store/apps/details?id=com.jayapatakaswami.jpsapp
அங்கீகரிக்கப்பட்ட வலைதளம்: https://www.jayapatakaswami.com
Lectures (Audio & Transcription): https://jayapatakaswamiarchives.net
வலையொளி ஒளியலை வரிசை (யூடியூப் சேனல்): http://youtube.com/jayapatakaswamiofficial
சவுண்ட்களவு ப கீர்த்தனை மற்றும் உபன்யாசங்கள்: http://www.soundcloud.com/jayapatakaswami
முகநூல்: http://www.facebook.com/Jayapatakaswami
டெலிகிராம ஒளியலை வரிசை: https://t.me/JayapatakaSwami
புலன ஒளியலை வரிசை (வாட்ஸ் அப் சேனல்): https://whatsapp.com/channel/0029VaBTu8uIiRoqvPKige0G
இண்ஸ்டாகிராம் பக்கம்: http://www.insftagram.com/Jayapatakaswamionline

Translate »